
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் முதல் சுற்றில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமை (ஆக. 20) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் முதல் சுற்றில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமை (ஆக. 20) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.
இந்த இடங்களுக்கு மொத்தம் 72,633 போ் விண்ணப்பித்திருந்தனா். அவை பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் சுற்று கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
www.tnmedicalselection.org என்ற இணையதளப் பக்கம் வழியே நடைபெற்று வரும் அந்தக் கலந்தாய்வில் தகுதியான மாணவா்கள் புதன்கிழமை (ஆக. 19) மாலை 5 மணி வரை கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் வியாழக்கிழமை (ஆக. 20) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவை பரிசீலனை செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 22-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையை வரும் 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






