ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையைப் பார்வையிட்ட முதல்வர்!

இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டு கொண்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டது குறித்து...

The Chief Minister viewed the ancient statue retrieved from England.

இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையைப் பார்வையிட்ட முதல்வர். - படம் - எக்ஸ்

Published On :18 ஆகஸ்ட் 2026, 8:15 pm IST

இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 18) பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையும், மூன்று உலோகச் சிலைகளான காளிங்கநர்த்தனர் கிருஷ்ணர். விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி என மொத்தம் 4 சிலைகள் களவாடப்பட்டதாக அத்திருக்கோயிலின் செயல் அலுவலரால் கடந்த 2020 பிப்ரவரி 12 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சிலையை, அந்த அருங்காட்சியகம் 1967 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும், தொடர் விசாரணையில், அமெரிக்க நாட்டின், சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஆசியக் 56,000 அருங்காட்சியகத்தில் காளிங்கநர்த்தனர் உலோகச் புளோரிடாவிலுள்ள ஹில் ஏலக் காட்சியகத்தில் ஸ்ரீதேவி உலோகச் சிலையும். டெக்சாசிலுள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு உலோகச் சிலையும் இருப்பது கண்டறியப்பட்டது.

சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையின் பூர்வீகம் மற்றும் உண்மையான தோற்றம் தொடர்பான அனைத்து அறிவியல் ஆதாரங்களையும் சேகரித்ததோடு, நம்பகமான மற்றும் மறுக்க முடியாத ஆதாரங்களைத் தொகுத்து. இங்கிலாந்து நாட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததன் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி. சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவால் வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வுசெய்து, விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கவுன்சில் ஏற்றுக்கொண்டதோடு, திருமங்கை ஆழ்வார் சிலையை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து ஒப்படைப்பதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்தது.

அதனடிப்படையில், தூதரக நடவடிக்கைகளின் மூலம் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, தமிழ்நாடு அரசின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு, இந்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், கலாசார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு கடந்த ஆக. 16 ஆம் தேதி வெற்றிகரமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வரிடம் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு) டி. கல்பனா நாயக்,ஆகியோர் காண்பித்தனர். அப்போது, இச்சிலையை மீட்டுக் கொண்டுவந்த சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவினருக்குத் முதல்வர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து. அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, அதன் மூலக்கோயிலில் நடைமுறையிலுள்ள சமயச் சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளின்படி பொதுமக்களின் வழிபாட்டிற்காக மீண்டும் நிறுவப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay inspected the ancient bronze statue of Thirumangai Alvar recovered from England and brought to Tamil Nadu at the Secretariat today (August 18).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.