ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு: நயினார் குற்றச்சாட்டு

தொழில்துறையைக் காக்க மின்சார பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளது பற்றி...

Nainar nagendran makes uncivilized remarks about Chief Minister Vijay

முதல்வர் விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம் | x

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:01 pm IST

மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை (ஆக. 17) குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால் மக்களின் டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது.

இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்சினையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த தவெக அரசையே சாரும். மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்சனைக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு.

நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு. - படம் - எக்ஸ்

Summary

BJP State President Nainar Nagendran alleged on Monday (Aug. 17) that the TVK government does not know how to properly manage electricity demand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.