ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அவைத் தலைவர் சொன்னது என்ன?

முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா என்பது குறித்து அவைத் தலைவர் சொன்னது பற்றி..

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

தமிழக பேரவைக்குள், முதல்வர் ஜோசப் விஜய் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர், அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இது குறித்து விளக்கம் அளித்தார்.

பேரவைக்குள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருக்கிறார் என்ற ரமேஷின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கே.என். நேரு விளக்கம் கொடுத்தார்.

பிறகு, அவைத் தலைவர் அளித்த விளக்கத்தில், பேரவைக்குள் முதல்வர் வரும்போது, அவை கூடுவதற்கு முன்பு இருபக்கமும் வணக்கம் தெரிவிக்கும்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பதையும் பார்த்திருக்கிறேன். சில உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.

இந்த அவையின் கண்ணியம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கு ஒரு மரியாதை தெரிவித்துக் கொள்வது என்பது அடிப்படை. அவரவர்களுக்கு உரிய கட்சிப் பாகுபாடுகளை மறந்து மதிப்பளிக்கின்றார் என்பதுதான் அவையின் வரலாறு, பண்பாடு.

எனவே அவைக்குள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் வரும்போது எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

ஆனால், அப்படி தெரிவிப்பது என்பது தமிழருடைய பண்பாடு, அதனை கட்டிக்காக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றிக் கூட அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன், யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.

Summary

Must one stand up when the CM arrives? What did the Leader of the House say?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.