ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடகத்தில் தமிழக விவசாயிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை: சிபிஐ கண்டனம்

கர்நாடகத்தில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகள் கா்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து...

CPI condemns

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:58 pm IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகள் கா்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வனப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகிய மூவரை கர்நாடக மாநில வனத்துறையினர் சனிக்கிழமை(ஆக.15) சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.

வனத்துறையினர் தங்களது கொலைக் குற்றத்தை திசை திருப்ப அவர்கள் வேட்டையாடினார்கள் என பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.

இந்த கொலையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கர்நாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

இந்த கொலை குறித்து, தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

Three Tamil Nadu farmers shot dead in Karnataka: CPI condemns incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.