ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல், ஒருவர் கைது

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் பறிமுதல் குறித்து...

Gold worth ₹2 crore seized

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் பறிமுதல் - கோப்புப்படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 10:52 pm IST

சென்னை: சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான சோதனையில் ரயில்வே போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மைசூரில் இருந்து வந்த சென்னை ரயில் (எண் 16022) நடைமேடை எண் 1-ல் வந்தடைந்தது. அப்போது, முன்பக்க பொதுப் பெட்டியில் இருந்து தோள்பையுடன் இறங்கிய ஒருவரை பிடித்து ரயில்வே போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.

அப்போது முன்னுக்கு பின்முரணாக பேசியபடி அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். சுதாரித்து கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் அவரைப் பிடித்து சோதனை செய்துள்ளனா்.

அப்போது அவரது பெயர் அபிஷேக்(44) என தெரியவந்துள்ளது. அவர் வைத்திருந்த பையில் உரிய ஆவணங்களின்றி சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான 1.369 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், பறிமுதல் செய்த தங்கத்தையும் பிடிபட்ட அபிஷேக் என்ற நபரையும் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவரிடம் வருமான வரித் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Summary

Gold worth ₹2 crore seized at Perambur railway station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.