ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அவிநாசி அருகே பைக் மீது கார் மோதி விபத்து: தாய், குழந்தை பலி

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து...

accident

மாதிரிப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 6:41 pm IST

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தாய் மற்றும் 5 வயது பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டன்பாளையம் சங்கிலித் தோட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (35). தனியார் பனியன் நிறுவன சமையல் கலைஞர். இவரது மனைவி சுமீனா (26). இவர்களது 5 வயது பெண் குழந்தை மேகலா. இந்நிலையில், கர்ப்பமாக உள்ள சுமீனாவுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக 3 பேரும் பெருமாநல்லூர் அரசு மருத்துமனைக்கு வந்துள்ளனர்.

பிறகு, ஊத்துக்குளி நோக்கி சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வலசுப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சுமீனா, மேகலா ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த கணவர் பெரியசாமி சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த பழனிசாமி(50) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Car hits motorcycle near Avinashi: Mother and child killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.