ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் அதிமுகவில் இணைந்தார்.

தவெக வேட்பாளர் அருண்குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 7:10 pm IST

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் அதிமுகவில் இணைந்தார்.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

அருண்குமாரின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யாத காரணத்தால் இருவரின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்பட்டன.

இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார்.

அருண்குமார் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வேண்டுமென்றே வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக தவெக-வினர் பலரும் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் அருண்குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

அவர் அதிமுகவில் இணைந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Summary

TVK's Edappadi constituency candidate Arun Kumar has joined the AIADMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.