ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு...

tn rain

மழைக்கு வாய்ப்பு - ENS

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக.17) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை, வேலூா்-100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயா்வும் பிற பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கும்.

மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. சேந்தமங்கலம் (நாமக்கல்), மரக்காணம் (விழுப்புரம்), மருத்துவக்குடி (தஞ்சாவூா்) 80 மி.மீ. மழை பதிவானது.

Summary

Chance of moderate rain in Western Ghats districts today.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.