ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை!

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கோல் மங்கலம் யானை தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது பற்றி..

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:26 pm IST

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கோல் மங்கலம் யானை தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது.

சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டு, நெற்றியில் மூவர்ண மலர்களை அணிந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

பின்னர் தேசியக் கொடிக் கம்பத்தின் அருகே வந்த மங்கலம் யானை தனது துதிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தியது. நாட்டின் சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் யானை மங்கலம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சி அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனர்.

இந்நிலையில், கோயில் சார்பில் அச்சடிக்கப்பட்ட சுதந்திர தின நோட்டீஸில் 80வது சுதந்திர தினம் என்பதற்குப் பதில் 79 வது சுதந்திர தினம் அன அச்சடிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.