ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?

திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறியது குறித்து...

திமுக அமைப்புச்செயலர் ஆர். எஸ். பாரதி. - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:32 pm IST

திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, "வீட்டு வரியெல்லாம் ஏறிவிட்டதாம். அதனைப் பற்றி நமக்கென்ன கவலை. இனிமேல் நாம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். வாக்களித்தவர்கள்தானே காரணம்.

அவர்களே அவர்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டால்தான் புத்தி வரும். பேருந்து நிலையங்களில் எல்லோரும் கஞ்சா அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் விசிலுக்கு (தவெக) வாக்களித்ததால்தான்.

இனிவரும் காலங்களில் திமுக, அதன் வரலாறு, அனைவருக்கும் சீட் கொடுத்தது உள்ளிட்டவற்றைச் சொன்னால்தான் புத்தி வரும்.

சைதாப்பேட்டை தொகுதியில் அவர் (மா.சுப்பிரமணியன்) செய்தவற்றைப்போல வேறு எவரும் செய்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியால்கூட அங்கே மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. ஆலந்தூர் பகுதியினருக்கும் இது பெரும் வசதியாக இருந்தது.

அந்த மருத்துவமனையில் நோயாளியாகச் சென்றவர்களும், அவர்களின் உறவினர்கள் வாக்களித்திருந்தால்கூட நாம் (திமுக) ஜெயித்திருப்போம். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" என்று தெரிவித்தார்.

Summary

Voters who defeated DMK will not have a good death, says DMK Leader R.S. Bharathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.