ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேரணி நடத்த தவெகவுக்கு மட்டும் அனுமதியா? கோவை என்ன ஆப்கனா, பாகிஸ்தானா? நீதிமன்றம் கேள்வி

பேரணி நடத்த தவெகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன் என்றும் கோவை என்ன ஆப்கனா, பாகிஸ்தானா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பற்றி..

Madras HC

சென்னை உயர் நீதிமன்றம் - IANS

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:46 pm IST

கோவையில், தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி கிடையாது, பாஜகவுக்கு அனுமதி கிடையாது, தவெகவுக்கு மட்டும் அனுமதியா? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்ததற்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மேலும், கோவையில் பாஜக பேரணி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவை நகரம் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா?என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், பாஜக பேரணிக்கு மறுத்த வழக்கில், காவல்துறைகு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, தெவக பேரணிக்கு அனுமதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.