ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளிகளில் சுதந்திர தின விழா: கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தினவிழா - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலா்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

தவிர பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா்கள், புரவலா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைக்கீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.