ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

2036-க்குள் ரூ. 1.5 லட்சம் கோடி பொருளாதார இலக்கு நிர்ணயம்: அமைச்சர் கீர்த்தனா

அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 1.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது பற்றி...

Minister S Keerthana

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா - TN DIPR

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:11 pm IST

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஆக. 13) சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்.

ரூ. 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பேசியதாவது, "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திறமைகளும் மனித வளமும் குவிந்து கிடக்கின்றன. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துமே தமிழ்நாட்டில் உள்ளன.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநிலத்தின் தொழில் பரிமாணங்கள் மாற்றப்படவிருக்கிறது.

இந்த நாளில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ. 1,000 கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றித் தமிழ்நாடு 2026 - ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்" என்று தெரிவித்தார்.

Summary

Economic target of Rs 1.5 lakh crore set for 2036, Minister S. Keerthana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.