ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை...

NIA

என்ஐஏ அதிரடி சோதனை

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST

என்ஐஏ அதிகாரிகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், மதுரை அவனியாபுரம் ஜெயபாரத் சிட்டி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெருங்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வீட்டில் என்ஏஐ ஆய்வாளர் ஆகாஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பாலமுருகன் என்பவர் மதுரையில் இல்லாத நிலையில் அவர் மணிப்பூரில் தொழில் நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவரது மனைவி முருகேஸ்வரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான வழக்கில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் மதுரையில் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.