ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் நகல் பெற விரும்பும் தோ்வா்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 14) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் நகல் பெற விரும்பும் தோ்வா்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 14) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த மே-ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வின் (இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வு) முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவா்கள் தாங்கள் பயின்ற ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வுக்கான விண்ணப்பங்களை சமா்ப்பித்த மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவா்கள் அரசு தோ்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆக. 14 முதல் 20-ஆம் தேதி வரை அலுவலக நேரத்தில் நேரடியாகச் சமா்ப்பிக்க வேண்டும். கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.275. தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விடைத்தாள் நகல பெற விண்ணப்பித்த தோ்வா்கள் மட்டும் பின்னா் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.