ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் 15 நாள்களில் 1,577 குற்றவாளிகள் கைது

தமிழகத்தில் கடந்த 15 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பல்வேறு வழக்கு குற்றவாளிகள் 1,577 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

தமிழகத்தில் கடந்த 15 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பல்வேறு வழக்கு குற்றவாளிகள் 1,577 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவின்பேரில், கடந்த ஜூலை 29 முதல் ஆக. 11 வரை மாநிலம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடா் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தொடா் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், 52,279 பதிவேடு குற்றவாளிகளில் 1,577 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா். மேலும், பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைகளை நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 3,288 பிடி ஆணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிடி ஆணைகளை நிறைவேற்றுவதுடன், தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடா் நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க மாநகர காவல் ஆணையா்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை மூலம் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதுடன், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.