ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது பற்றி...

Cauvery Regulation Committee

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:33 pm IST

காவிரியில் தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய 45 டிஎம்சி நீரை திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் நிலுவையில் உள்ள 33 டிஎம்சி நீரையும் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதையடுத்து, காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு கர்நாடகம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆக. 12 காலை 8 மணி முதல் 15 நாள்களுக்கு, பிலிகுண்டுலுவில் 12,000 கனஅடி நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்வதை ஆய்வு செய்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும்.

Summary

1 TMC of water must be released for 15 days: Cauvery Regulation Committee recommends

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.