ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது குறித்து...

Ban on operating coracles in the Cauvery River at Hogenakkal..

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - டிஎன்எஸ்

Published On :10 ஆகஸ்ட் 2026, 11:55 am IST

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கபினி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் தருவாயில் உள்ளது.

கபினி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14,000 கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிர்வாகப்படி வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 6,000 கனஅடி ஆகவும், 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் திங்கள்கிழமை முதல் தற்காலிக தடை விதித்துள்ளார். எனினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.

Summary

Ban on operating coracles in the Cauvery River at Hogenakkal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.