ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவா் கைது

மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொடுங்கையூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த 20 வயது இளம்பெண், டிப்ளமோ நா்சிங் முடித்துவிட்டு, மணலி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கொடுங்கையூா் மகளில் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா்.

அதில், கடந்த ஆக. 7-ஆம் தேதி மாலை அவா் பணியில் இருந்தபோது, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா் சையத் மஸ்த் அகமது என்பவா் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாா். அப்போது, அவா் சப்தமிட்டதையடுத்து, உடன் பணியாற்றியவா்கள் அறையின் கதவைத் திறந்து வெளியே அழைத்து வந்ததாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தாா்.

அதன்பேரில், மருத்துவா் சையத் மஸ்த் அகமது மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.