ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் புதிய பொறுப்பு!

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், விஜயபாஸ்கருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், அருண்ராஜ்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:26 pm IST

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜய்பாஸ்கர், எம்.ஆர். விஜய்பாஸ்கர் ஆகியோருக்கு தமிழக வெற்றி கழகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்தவா்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அவரது தரப்பைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனர்.

ஆனால், முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் இருந்து வந்தார். அவர் மட்டுமின்றி, சில எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து, அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஜெயகுமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்தும் விலகி தவெகவில் இணைந்தனர்.

அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், சி.மகேந்திரன், வா.புகழேந்தி ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் பதவியும், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்ட அமைப்புச் செயலர் பதவியும், இசக்கி சுப்பையாவுக்கு தென்காசி மாவட்ட அமைப்புச் செயலர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெக துணைப் பொதுச் செயலராகவும், மரகதம் குமரவேல் உள்ளிட்ட 11 பேர் துணைப் பொதுச் செயலர்களாக நியமித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Summary

Former ministers C. Vijayabaskar and M.R. Vijayabaskar, who left the AIADMK, have been assigned new responsibilities in the Tamilaga Vettri Kazhagam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.