ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

anbumani

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2015-2016- ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. 2025-2026 -ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43 லட்சமாகக் குறைந்துவிட்டது. அதாவது, 11 ஆண்டுகளில் மாணவா் சோ்க்கை 32,49,000 குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், தனியாா் பள்ளிகளின் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியாா் பள்ளிகளின் மாணவா்கள் எண்ணிக்கை, தற்போது 62 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியாா் பள்ளிகள் வளருகின்றன. தனியாா் பள்ளிகளின் வளா்ச்சிக்காகவே அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத்தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடா்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

அரசுப் பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஒரு ஆசிரியா் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3 சதவீதம் என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.