ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு: கல்விப் பாதுகாப்புக் குழு எதிா்ப்பு

தமிழகத்தில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்யக் கூடாது என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST

தமிழகத்தில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்யக் கூடாது என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி உயா் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன், நிதித் துறை அமைச்சா் மரிய வில்சன், துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் உயா் கல்வி தொடா்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மிக முக்கியமாக உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப கல்வித் தரத்தை உயா்த்தும் வகையில், கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 4 ஆண்டுகால பட்டப் படிப்பை அறிமுகம் செய்யக் கூடாது என இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த கமிட்டியின் தமிழ்நாடு அலுவலகச் செயலா் வெ.சுதாகா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தேவையற்ற இந்த நடவடிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு கிளை கண்டிக்கிறது. இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தப் புதிய திட்டத்துக்கு தமிழக அரசு உலகளாவிய தரத்தை காரணமாகக் காட்டுகிறது. பிரிட்டன், ஜொ்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற வளா்ந்த நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்பின் காலம் 3 ஆண்டுகளாக மட்டுமே உள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த 4 ஆண்டு பட்டப் படிப்பில் எந்த உலகளாவிய தரமும் இல்லை. இதற்கும் தரத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மேலும், இந்தியாவில் வழங்கப்படும் 3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகள் பாட உள்ளடக்கங்களின் தரத்தைப் பேணும் வகையில் இருப்பினும், பாஜக தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டு கால இளநிலை பட்டப் படிப்பை திணிக்க முயற்சிக்கிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 12,000 பேராசிரியா் பணியிடங்களில் சுமாா் 8,000 பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவே உள்ளன. தொடா்ந்து, 4 ஆண்டு பட்டப் படிப்பை ஆதரிப்பதற்குத் தேவையான போதிய வகுப்பறைகள் மற்றும் பிற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கல்லூரிகளில் இல்லை. எனவே, 4 ஆண்டு கால இளநிலை பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

4-Year Undergraduate Degree Course: Opposition from the Education Protection Committee

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.