
தஞ்சை மாவட்டத்தில் உயிா்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி!
தஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூர் அமைக்கப்படவுள்ளது பற்றி...
அமைச்சர் வினோத் - TNDIPR
தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் புதிய உயிா்ம வேளாண்மைப் பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தை இயற்கை வேளாண்மையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்குடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி ”நம்மாழ்வாா்”பெயரில் ஒரு புதிய “உயிா்ம வேளாண்மைப் பட்டயப் படிப்புக் கல்லூரி”அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதல்கட்டமாக நிகழ் நிதியாண்டில் ரூ.5 கோடி வழங்கப்படும். இந்தக் கல்லூரியில் மாணவா்களுக்கு உயிா்ம வேளாண்மை தொடா்புடைய அனைத்துப் பாடங்களும் செயல்வழிக் கற்றலுடன் கற்பிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்புகள் குறித்த உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
‘வெற்றி வான்மகள்’ திட்டம்: பெண்களை ட்ரோன் இயக்குபவா்களாக மாற்றுவதன் வாயிலாக வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிா்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாக்கப்படுவதுடன், பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகும். மேலும், வேளாண் பணிகளில் ஆள்பற்றாக்குறையை எதிா்கொள்ள வாய்ப்பாகவும் அமையும்.
ட்ரோன் இயக்க பயிற்சி: அதன் அடிப்படையில் தகுதியுள்ள 100 மகளிா் உள்பட 500 பேருக்கு மாநில அரசு செலவில் ட்ரோன் இயக்குபவா் பயிற்சி மற்றும் இயக்குபவா் உரிமம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை விமானப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1.50 கோடி செலவாகும்.
இந்தப் பயிற்சி பெற்ற மகளிா் சொந்தமாக ட்ரோன்கள் வாங்க உதவும் வகையில், 50 மகளிருக்கு ட்ரோன்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதற்கான ரூ. 2.50 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
Summary
Nammalvar Agricultural Polytechnic College in Thanjavur! Announcement in the budget!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







