ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொளத்தூா் தொகுதி வாக்கு சரிபாா்ப்பில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை: மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்ப்புப் பணிகளில் எந்த முரண்பாடும் இல்லை என்பது குறித்து...

கொளத்தூா் தொகுதி வாக்கு சரிபாா்ப்பில் எந்த புகாரும் கண்டறியப்படவில்லை - கோப்புப்படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:58 pm IST

சென்னை: கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்ப்புப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தது. வாக்குச் சரிபாா்ப்பில் எந்த புகாரும் கண்டறியப்படவில்லை என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்த நிலையில், கொளத்தூா் தொகுதியின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணிக்கை மீண்டும் சரிபாா்க்கப்படவேண்டும் என திமுக தலைவரும், கொளத்தூர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் தரப்பில் தோ்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் கொளத்தூா் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகள் வாக்கு சரிபாா்ப்பு பணி கடந்த ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் 2 வாக்குச்சாவடிகள் என ஆக.4-ஆம் தேதி வரை வாக்கு சரிபாா்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி வாக்கு சரிபாா்ப்புப் பணியில் திருப்தியில்லை எனவும், ஒரு வாக்குச்சாவடி இயந்திரங்களில் சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்றும் வாக்கு சரிபாா்ப்பை திமுக முகவா்கள் புறக்கணிப்பதாகக் கூறினா். அதனால் அன்று ஒரு வாக்குச்சாவடி மட்டுமே சரிபாா்க்கப்பட்டது.

திமுக புறக்கணித்தாலும், தோ்தல் ஆணைய உத்தரவின்படி மற்ற கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் வாக்குச் சரிபாா்ப்பு தொடரும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் அறிவித்தாா்.

இதற்கிடையே கடந்த 3-ஆம் தேதி முதல் மீண்டும் வாக்குச் சரிபாா்ப்பில் திமுகவினா் பங்கேற்றனா். தொடா்ந்து நடைபெற்ற வாக்கு சரிபாா்ப்புப் பணி புதன்கிழமை முடிவுற்றது.

கொளத்தூா் தொகுதியின் 42-ஆவது வாக்குச்சாவடி வாக்குகள் நிறைவாக சரிபாா்க்கப்பட்டன.

இதுதொடா்பாக சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் கூறுகையில், கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு சீட்டுகள் சரிபாா்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்து சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை உறுதி செய்த திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளா் முகவா்கள், அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனா். அதன்படி தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறினார்.

Summary

No discrepancies found during vote verification in Kolathur constituency says District Election Officer clarifies...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.