ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உழவா் ‘ஏஐ’ திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் ‘உழவா் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ (ஏஐ) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

AI

ஏஐ - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் ‘உழவா் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ (ஏஐ) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகா் என்பதை உணா்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி, மண்வளம் மற்றும் பயிா் சாகுபடி குறித்தத் தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து வானிலை முன்னறிவிப்பு, மண்நலம் மற்றும் மண் வளம், நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிா் என விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும்.

இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள், அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசாா் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில், 2026-2027-ஆம் ஆண்டில் ‘உழவா் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ செயல்படுத்த மாநில நிதியிலிருந்து ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.