ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழக பட்ஜெட் 2026 ! ஜன நாயகன், நெஞ்சில் குடியிருக்கும் - மரிய வில்சன் உரை

தமிழக பட்ஜெட்டில், ஜன நாயகன், நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகங்கள் அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தன.

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:02 am IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன், 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றியபோது ஜனநாயகன், நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கு, மக்கள் பணத்தை தொட்டால் விட மாட்டோம் என்பது போன்ற முதல்வர் விஜய் சொல்லும் வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதில், பெண்கள், இளைஞா்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுடும் நிலையில் அறிவிப்புகளுக்கு முன்பு, கடந்த 3 மாத கால சாதனைகளை அமைச்சர் பட்டியலிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து ஜனநாயகனாக இந்த பேரவையில் அமர்ந்துள்ளார் நமது முதலமைச்சர். ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் ஏரளாமான சாதனை செய்துள்ளார்.

நெஞ்சில் குடியிருக்கு தமிழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள் அரசுப் பணத்தை யாரும் தொட விட மோட்டோம். யாரும் தொட்டலும் விட மாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்ற அடிப்படையில் முதல்வர் பணியாற்றி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.