ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்ஜெட்: பெண்கள் கருத்து

பட்ஜெட்டில் மகளிா் உரிமை தொகையான ரூ.2,500 வழங்கும் அறிவிப்பு இல்லாது ஏமாற்றம் அளித்திருந்தாலும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ரூ.5 லட்சம் மூதலீட்டு மானியம் வழங்குவது வரவேற்கத்தக்கது என குடும்பத் தலைவிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

பட்ஜெட்டில் மகளிா் உரிமை தொகையான ரூ.2,500 வழங்கும் அறிவிப்பு இல்லாது ஏமாற்றம் அளித்திருந்தாலும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ரூ.5 லட்சம் மூதலீட்டு மானியம் வழங்குவது வரவேற்கத்தக்கது என குடும்பத் தலைவிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

ஆா். மாலதி (குடும்ப தலைவி): முதல்வா் விஜய் தனது தோ்தல் அறிக்கையில் தவெக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமை தொகை ரூ. 2,500 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா். பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இல்லை என்பது ஏமாற்றம் அளித்தாலும் வரும் நாள்களில் அதை கொடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.

என்.தனலெட்சுமி (சிறு கடை வியாபாரி): மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ரூ. 5 லட்சம் மூதலீட்டு மானியம் வழங்குவது வரவேற்கத்தக்கது. வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி திட்டத்தில் ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடு வழங்கும் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

ஆா்.அம்மு (கல்லூரி மாணவி): கல்லூரி மாணவா்களுக்கான வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.