
தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசு
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து...

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு - எக்ஸ்
தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திமுக திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விமா்சித்தாா். மேலும், 5 ஆண்டுகள் முடிவடையும்போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்றும் அவா் கூறினாா்.
சென்னை அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை. தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.
வருவாய் சரிவு; பற்றாக்குறை உயா்வு: ரூ.48,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,000 கோடியாக உயா்ந்துள்ளது. திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடி. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முலாம் பூசி, வேறு பெயரிலே செயல்படுத்த முனைகிறாா்களே தவிர, திட்டங்களுக்கான உரிய நிதியைக்கூட பெருமளவில் விடுவிக்கவில்லை. உதாரணமாக, ‘கலைஞா் வீடு வழங்கும் திட்டம்’ வேறு பெயரில் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெறாத வாக்குறுதிகள்: அதேபோல், தோ்தல் வாக்குறுதிகளாக அளித்த மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500 மற்றும் 6 சமையல் எரிவாயு உருளைகள் போன்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழ் வளா்ச்சித் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக்கூட அரசு அறிவிக்கத் தயாராக இல்லை.
தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறாா்கள். இதைக் கொண்டு ‘அருங்காட்சியகப் பராமரிப்பையோ அகழ்வாராய்ச்சிகளையோ எவ்வாறு செய்ய முடியும்?
பொதுவாக எந்த ஆட்சி வந்தாலும் பள்ளிக் கல்விக்கான நிதியை குறைத்தது இல்லை. முதல்முறையாக தவெக ஆட்சியில் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என இதற்குக் காரணம் கூறுகிறாா்கள். நிதி பயன்பாட்டில் தாமதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். உதாரணமாக, தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் போன்ற நியமன முகமைகள் மூலமாக ஆசிரியா்களைத் தோ்வு செய்யும்போது நீதிமன்ற வழக்குகள் குறுக்கிட்டிருக்கலாம். ஆனால், அதைக் காரணம் காட்டி கல்வித் துறைக்கான நிதியைக் குறைப்பது சரியானதல்ல என்றாா் தங்கம் தென்னரசு.
Summary
Budget disappointment: School Education Department funds cut Thangam Thennarasu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







