
அரக்கோணம்-திருத்தணிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே 3 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்... - கோப்புப் படம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே 3 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு அரக்கோணம் - திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, புதன்கிழமை (ஆக. 5) முதல் வரும் ஆக. 7 -ஆம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. புதன்கிழமை (ஆக. 5) அரக்கோணத்தில் காலை 10.18 மணியிலிருந்து சிறப்பு பயணிகள் ரயில் புறப்படும். மறுமாா்க்கத்தில் திருத்தணியிலிருந்து காலை 10.40 மணி முதல் 10.50 மணிக்குள் பயணிகள் சிறப்பு ரயில் புறப்படும்.
அதேபோல, வரும் 6- ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 12.58 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் பயணிகள் சிறப்பு ரயில் புறப்படும். மறுமாா்க்கத்தில் திருத்தணியிலிருந்து பிற்பகல் 1.20 மணி முதல் 1.30 மணிக்குள் பயணிகள் சிறப்பு ரயில் புறப்படும். வரும் 7 -ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 2.48 மணி முதல் 2.50 மணிக்குள்ளும், திருத்தணியிலிருந்து பிற்பகல் 3.10 மணி முதல் 3.20 மணிக்குள்ளும் பயணிகள் சிறப்பு ரயில் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





