
கபினியில் நீர் திறப்பு 27,000 கன அடியாக அதிகரிப்பு!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

கபினி அணை - கோப்புப்படம்
கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 27,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று 25ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு, இன்று 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 அடியுடைய கபினி அணையின் இன்றைய நீர்மட்டம் 82.59 அடியாக உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று மாலைக்குள் காவிரி நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடையும் எனத் தெரிகிறது. கேரளத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் கபினி அணைக்கு நீா்வரத்து பெருகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, உபரிநீா் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நிலை ஏற்படும்.
தற்போது, கபினி ஆற்றின் நீா்ப் பாசனப் பகுதிகளில் அதாவது சரகூறு, நஞ்சன்கூடு, சுத்தூா், டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் வெள்ளம் ஆா்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பகுதியை சோ்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Summary
27,000 cusecs of water has been released from the Kabini Dam to Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





