ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!

தவெக தவெக என பள்ளி மாணவர்கள் கோஷம் எழுப்பிய விடியோவால் மீண்டும் சர்ச்சை

விடியோவால் பரபரப்பு

விடியோவால் பரபரப்பு - video grab

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:01 pm IST

காரைக்குடியில் அரசுப் பள்ளிக்குச் சென்ற அமைச்சர் பிரபு, அங்கிருந்த மாணவர்கள் தவெக.. தவெக.. என கோஷமெழுப்பியபோது, மைக்கை அவர்கள் பக்கம் திருப்பி, அதனை விடியோவாக வெளியிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அரசுப் பள்ளிக்குள் சென்று ரீல்ஸ், விடியோ எடுத்து வெளியிட வேண்டாம் என்று, அமைச்சர்கள் கூட்டத்திலேயே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு முன்பு, தவெக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் திடீர் திடீரென பள்ளிகளுக்குள் சென்று அங்கிருக்கும் மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு அல்லது தவெக, முதல்வர் விஜய் பற்றி பாடங்கள் எடுத்து அதனை விடியோ வெளியிட்டு வந்தனர்.

ஆனால், இவர்கள் போடும் அனைத்து விடியோக்களும் எதிர்மறையான கருத்துகளையே ஏற்படுத்தின. அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில்தான் முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு நேரடியாகவே இந்த எச்சரிக்கையை வைக்க வேண்டியதாகிப் போனது. இந்த நிலையில் அமைச்சர் பிரபு, காரைக்குடியில் மாணவர்களை தவெக தவெக என கோஷம் எழுப்ப வைத்து அதற்கு மைக்கைப் பிடித்து விடியோ எடுத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையைக் கூட்டியிருக்கிறார்.

இந்த விடியோவுக்கு தவெகவினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். குழந்தைகளிடம் அரசியலை திணிக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்களும் கருத்திட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.