ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை! மு.க. ஸ்டாலின் மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை....

Freedom fighter Dheeran Chinnamalai Memorial Day: M.K. Stalin pays tribute

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை. - x/ mk stalin

Published On :3 ஆகஸ்ட் 2026, 11:29 am IST

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்களால் சூழ்ச்சி செய்து சிறைபிடிக்கப்பட்டு, ஆடி 18-ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18 ஆம் தேதி அவருடைய நினைவு நாளில் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Story image

அதன்படி, தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்குக் கீழ் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக மூத்த தலைவர்கள் பலரும் அவருடன் தீரன் சின்னமலை புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தீரன் சின்னமலை பற்றி,

"ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்!

எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.

திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி.

நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்!" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Summary

Freedom fighter Dheeran Chinnamalai Memorial Day: M.K. Stalin pays tribute

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.