ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு! செந்தில் பாலாஜி மனு வாபஸ்!

காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை செந்தில் பாலாஜி வாபஸ் பெற்றது பற்றி...

senthil balaji

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார்.

ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களுடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், குதிரை பேர வழக்கின் முன்பிணை நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாள்கள் விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கும் காவல்துறைக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவைத் திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நீதிபதியின் முன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பினர் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Summary

Exemption from appearing at the police station! Senthil Balaji withdraws petition!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.