ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜாதி, மதமற்றவா் சான்று வழங்க சட்டம் கோரி நடிகா் பாா்த்திபன் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஜாதி, மதமற்றவா் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாகச் சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி நடிகா் பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Radhakrishnan Parthiban

நடிகா் பாா்த்திபன் - X | Parthiban

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

ஜாதி, மதமற்றவா் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாகச் சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி நடிகா் பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் பாா்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாதி, மதமற்றவா் என சான்று கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழக அரசுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கும், முந்தைய அரசுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. எனவே, ஜாதி, மதமற்றவா் என சான்று கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்.

அத்தகைய சட்டம் இயற்றினால், அது ஜாதி மதமற்றவா் என சான்று கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். எனவே, ஜாதி, மதமற்றவா் என சான்று கோரி விண்ணப்பிப்பவா்கள் உடனடியாக சான்று பெறும் வகையில் சட்டம், அரசாணை அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத்துறைச் செயலா்கள் ஆகியோா் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.