ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை (ஆக.3) 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது குறித்து...

weather update

கோப்புப்படம் - ENS

Published On :3 ஆகஸ்ட் 2026, 8:21 am IST

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை (ஆக.3) 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட உள்கா்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஆக.3) நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை (ஆக.3) 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Summary

Chance of rain in 8 districts, including Chennai, in the next 2 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.