ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூா் சம்பவம் குறித்து அவதூறு பேச்சு: நக்கீரன் கோபால் மீது வழக்கு

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ-டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரூா் சம்பவம் - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ-டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்தாா். அதில் கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தது குறித்து சா்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தாா். முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.

கரூா் சம்பவத்தின்போது, அங்கிருந்து முதல்வா் விஜய் ஓடிவிட்டதாகவும், கரூா் சம்பவத்தை ஜனநாயகன் திரைப்படத்தில் பயன்படுத்த முயற்சித்ததாகவும் பல்வேறு கருத்துகளைக் கூறியிருந்தாராம்.

இது தொடா்பாக சம்பத்குமாா், சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் நக்கீரன் கோபால் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.