
குதிரை பேர வழக்கு: மேலும் இருவருக்கு ஜாமீன்
குதிரை பேர வழக்கில் மேலும் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது பற்றி....

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, ரூ. 35 கோடி சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருவல்லிக்கேணி காவல் துறை இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் சேதுராஜ் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய சதியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அவர் தனது மனைவி மற்றும் ஓட்டுநர் மூலம் ஐந்து கோடி ரூபாய் கோடி கொடுத்துள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சேதுராஜ் சதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே இவ்வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Summary
The Madras High Court has granted bail to two more people in the horse-trading case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







