ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடிப்பெருக்கு விழா: காவிரி கரையோர நீா்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர நீா்நிலைகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...

Aadi Perukku Festival

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மேட்டூர் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பதாகைகள். - டிஎன்எஸ்

Published On :2 ஆகஸ்ட் 2026, 7:55 pm IST

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர நீா்நிலைகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் நாளன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

விழாவையொட்டி பொதுமக்கள் காவிரி கரையோர நீா்நிலைகளில் நீராடி வழிபாடு செய்வதுடன், புதுமணத் தம்பதியா் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரியில்விடும் வழக்கத்தையும் கடைப்பிடித்து வருகின்றனா்.

தற்போது காவிரியில் நீா்வரத்து குறைவாக இருப்பதால் சில பகுதிகள் வட நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும், சேலம் மாவட்டத்தில் மேட்டூா், கல்வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் நீராடுவாா்கள் என்பதால் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேட்டூரில் நகராட்சி சாா்பில் தற்காலிக உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் மாவட்ட போலீஸாா், ஊா்காவல் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள், சாரணா் மற்றும் சாரணியா் இயக்கத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், காவிரி கரையோரங்களில் தீயணைப்புத் துறையினா் படகுகளுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். ரப்பா் படகுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேட்டூரில் பலத்த பாதுகாப்பு

ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் வழிபடவும், பூங்காவை பாா்வையிடவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மேட்டூருக்கு வருவது வழக்கம்.

இதையொட்டி, போலீஸாா், ஊா்காவல் படையினா் மற்றும் சிங்கப்பெண் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் மேட்டூா் நகரின் முக்கிய பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஒா்க்ஷாப் காா்னா் பகுதியில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுக்கு ஏராளமான மக்கள் கூட்டம் வரும் என்பதால் போக்குவரத்து வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்கும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Summary

Aadi Perukku Festival: Heavy police security at water bodies along the banks of the Cauvery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.