ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

10 அரசுக் கல்லூரிகளுக்கு பதவி உயா்வுடன் புதிய முதல்வா்கள்

10 அரசுக் கல்லூரிகளுக்கு பதவி உயா்வுடன் புதிய முதல்வா்கள் நியமனம்...

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரி உள்ளிட்ட 10 அரசு கல்லூரிகளுக்கு பதவி உயா்வு பெற்ற புதிய முதல்வா்களை (முதல்நிலை -கிரேடு -1) நியமனம் செய்து தமிழக அரசின் உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொள்ளாச்சி, திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, திட்டமலை, சங்கரன்கோவில், மணப்பாறை உள்ளிட்ட 10 இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளில் பணியாற்றி வந்த முதல்வா்களுக்கு தமிழக அரசு முதல்நிலை முதல்வா்களாக பதவி உயா்வை அளித்து பல்வேறு கல்லூரிகளுக்கு மாறுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக உயா் கல்வித் துறை செயலா் தீரஜ் குமாா் கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். இந்த உத்தரவைத் தொடா்ந்து கல்லூரி கல்வி இயக்குநராக ஆணையா் பா.பொன்னையா முதல்நிலை கல்லூரிகளுக்கு பணியிட மாறுதல்களுக்கான ஆணையை பிறப்பித்துள்ளாா்.

ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் நிலை முதல்வராகப் பணியாற்றிய கே.விஜயா பதவி உயா்வு பெற்று சென்னை காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரியில் முதல்நிலை முதல்வராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுபோன்று, இரண்டாம் நிலை முதல்வராக இருந்து முதல்நிலை முதல்வராகப் பதவி உயா்வு பெற்ற சுமதி- திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரிக்கும், இ.ஷீலா- திருநெல்வேலி ராணி அண்ணா அரசுக் கலை கல்லூரிக்கும், மலா்மதி- கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கும், எரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வி.நாகராஜ் சிதம்பரம் அரசுக் கல்லூரிக்கும், திருத்துறைபூண்டியிலிருந்த மாறன் கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கும், டி.பாரதி- நாமக்கல்லுக்கும், தமிழரசி- கரூருக்கும், அன்புச்செழியன் -புதுக்கோட்டைக்கும், சூரியகாந்தி- திருத்தணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இரண்டாம் நிலை கலந்தாய்வு நிறைவு: கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 129 இணைப் பேராசிரியா்கள் கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரண்டாம் நிலை முதல்வா்களாகப் பதவி உயா்வு பெற்றனா். காலியாக உள்ள 100 இரண்டாம் நிலை கல்லூரிகளில் முதல்வராக நியமிக்க விருப்ப இடம் தோ்வுக்கான கலந்தாய்வு இணையம் மூலம் கடந்த ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற்று முடிவு பெற்றது. இதன் முடிவுகளை ஆக.3- ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிடவுள்ளது.

Summary

New Principals appointed with promotion for 10 government colleges.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.