ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து...

Flash floods at Courtallam waterfalls

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா். - கோப்புப்படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:59 am IST

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை ஆவலுடன் அருவிகளில் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தண்ணீா் வரத்து சீரானது. பின்னா், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தொடர்மழை காரணமாக தென்காசி குற்றால அருவிகளில் சனிக்கிழமை காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை ஆவலுடன் அருவிகளில் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Summary

Flash floods at Courtallam waterfalls. Tourists banned from bathing...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.