ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதா

காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழக முதல்வர் விஜய்யும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பற்றி...

Vijay | Premalatha Vijayakanth | DK Shivakumar

விஜய் | பிரேமலதா விஜயகாந்த் | டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 4:39 pm IST

காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழக முதல்வர் விஜய்யும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, "கர்நாடகத்தின் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் சென்று வருகிறாரே. கர்நாடக அரசிடம் பேசி, தமிழகத்துக்கு ஏன் தண்ணீர் கொண்டுவரவில்லை? கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரும் தமிழ்நாட்டின் கோயிலுக்கு வந்து செல்கிறார்.

இரண்டு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன? இருவருமே முதன்முறையாக முதல்வரானவர்கள். இருவருமே மக்களுக்காக பேசலாமே.

இந்தப் பிரச்னையை நீங்கள் இருவரும் சுமூகமாக முடித்தீர்கள் என்றால், இரு மாநில மக்களுமே உங்களைப் பாராட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.

Summary

Chief Ministers Vijay and D.K. Shivakumar should resolve the matter through amicable talks, DMDK Leader Premalatha Vijayakanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.