/

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

News image

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - PTI

Updated On :29 ஏப்ரல் 2026, 6:45 pm IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேட்ரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 122 - 132 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 85 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் சில வேறுபாடுகளுடன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு

தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் மேட்ரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்புகளில் திமுகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி 122 - 132 தொகுதிகளைக் கைப்பற்றும்.

அதிமுக தலைமையிலான கூட்டணி 50 - 65 தொகுதிகளில் வெற்றி பெறும்

தவெக கட்சி 13- 18 இடங்களில் வெற்றிபெறும்.

நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் 5 முதல் 8 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு

திமுக தலைமையிலான கூட்டணி 125 - 145

அதிமுக தலைமையிலான கூட்டணி 60 - 80

தவெக கட்சி 18 - 24

நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் 2-6 இடங்களைக் கைப்பற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் - பி மார்க் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணி : 125 - 145 இடங்களில் வெற்றி

அதிமுக கூட்டணி : 65 - 85 இடங்களில் வெற்றி

தவெக : 16 - 26 இடங்களில் வெற்றி

மற்றவை: 1 - 6 இடங்களில் வெற்றி

ஜேவிசி - டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 128 - 147 வெற்றி வாய்ப்புகள்

திமுக கூட்டணிக்கு 75 - 95 இடங்களில் வெற்றி வாய்ப்பு

விஜய்யின் தவெக கட்சிக்கு 8 - 15 இடங்களில் வெற்றி வாய்ப்பு

சிஎன்என்-நியூஸ் 18 கருத்துக் கணிப்பு

திமுக தலைமையிலான கூட்டணி - 103 - 113 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணி - 114 - 124 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு

தவெக - 4 - 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு

இதர - 0

ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு

தவெக - 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு

திமுக கூட்டணி - 92 - 110 இடங்களில் வெற்றி வாய்ப்பு

அதிமுக கூட்டணி - 22 - 23 இடங்களில் வெற்றி வாய்ப்பு

Summary

With the Tamil Nadu Assembly elections now over, the post-election opinion polls have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.