ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடி உடைப்பு!

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடியை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:00 pm

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடியை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை கொட்டிவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்துக்கு இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் ஞாயிற்றுக்கிழமை சாப்பிடச் சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது காா் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் கண்ணாடியை உடைத்த நபா்களைத் தேடி வருகின்றனா்.

தவெக தலைவா் விஜய்யின் அரசியல் வருகை தொடா்பாக, சமூக ஊடகத்தில் அண்மையில் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், அவரது காா் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.