மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டது பற்றி...

News image

சந்தீப் ராய் ரத்தோர் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:21 am

வாக்குச் சாவடிக்குள் தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி காவலர்கள் நுழையக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முந்தைய ஆண்டுகளைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகி வருகின்றன. பிற்பகல் 3 மணி வரை மட்டும் 70 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடி மையத்துக்குள் செல்லக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவலர்கள் அனைவரும் வாக்குச் சாவடியின் கதவுக்கு வெளியே நின்று பணிபுரிய வேண்டும் என்றும், வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியின் அனுமதி பெற்றே உள்ளே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்ந்து அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல காவல்துறை தலைவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Police personnel must not enter polling booths! Tamil Nadu DGP orders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.