தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது. வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள் பற்றி..
வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை ecinet.eci.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல்கள் தெரிய வேண்டும் என்றால் 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க செல்லும்போது கொண்டு செல்லலாம். இல்லாவிட்டால்
1. ஆதார் அட்டை
2. ஓட்டுநர் உரிமம்
3. பான் அட்டை
4. பாஸ்போர்ட்
5. வங்கி (அ) அஞ்சல் கணக்குப் புத்தகம்
6. ஓய்வூதிய சான்றிதழ்
7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை
8. சுகாதார காப்பீடு அட்டை
9. மத்திய, அரசு, பொதுத்துறை ஊழியர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க எடுத்துச் செல்லலாம்.
வாக்குச்சாவடியில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள்
வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சமதள பாதை ஏற்படுத்தப்பட்டிக்கும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சக்கர நாற்காலி வைக்கப்பட்டிருக்கிறது.
பார்வை மாற்றுத் திறநாளிகளின் வசதிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறை உருவாக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மூத்தக் குடிமக்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் வாக்களிக்க உதவுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதையெல்லாம் கொண்டு செல்லக்கூடாது?
வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்வோர் கையில் செல்போன் கொண்டு செல்லக் கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால் அதை வெளியில் வைத்துவிட்டுத்தான் செல்ல முடியும்.
செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களைத் தவிரத்து கேமராவை எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஹெட்ஃபோன் கொண்டு செல்ல அனுமதியில்லை.
ஸ்மார்ட் வாட்ச் கட்டிச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் மாற்று புகைப்பட அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்’

வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் ஆணையம்

வாக்களிக்க 13 அடையாள ஆவணங்கள் எவை? வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப்படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


