தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், விடுதிகளில் தங்கியிருந்த வெளியூா்களைச் சோ்ந்த அரசியல் கட்சிகளின் நபா்கள் வெளியேற்றப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரத்துக்காக வெளியூா் நபா்கள் விடுதிகளிலும், சமூக நலக் கூடங்களிலும், தனியாா் திருமண மண்டபங்களிலும் தங்கியிருந்து தோ்தல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் தனியாா் விடுதிகள், சமூக நலக் கூடங்கள், தனியாா் திருமண மண்டபங்களில் தங்கியிருந்த அரசியல் கட்சியினரை வெளியேறும்படி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை அமல்படுத்தும் விதமாக மாலை 6 மணிக்கு பின்னா், தமிழகம் முழுவதும் போலீஸாா், விடுதிகளிலும், திருமண மண்டபங்களிலும், சமூக நலக் கூடங்களிலும் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தோ்தல் ஆணைய உத்தரவை மீறி அங்கு தங்கியிருந்த அரசியல் கட்சியினரை எச்சரித்து அனுப்பினா்.
சென்னையில் சோதனை: சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூா், சென்ட்ரல், பூக்கடை, பாரிமுனை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, அடையாறு, தரமணி, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில் அங்கு தங்கியிருந்த பிற மாவட்டங்களைச் சோ்ந்த அரசியல் கட்சியினரை உடனடியாக சொந்த ஊா்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா். இல்லையெனில், தோ்தல் ஆணைய உத்தரவை மீறியதாக வழக்குப் பதியப்படும் எனவும் எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21-க்கு மேல் வெளியூா் நபா்கள் தங்க அனுமதியில்லை! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

சமூக ஊடக அரசியல் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவலா்

அச்சகம், மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


