கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இருசக்கர வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வடக்கு பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சிவசக்தி காலனி பகுதியில் வானதி சீனிவாசன் இன்று(ஏப். 21) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இருசக்கர வாகனப் பேரணியை தொடக்கி வைத்தார். அவரின் வாகனத்தில் வானதி சீனிவாசன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக, அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அண்ணாமலை, ”தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்கு சாதகமாக வர ஆரம்பித்துவிட்டது. மக்கள் எப்போதும் வாக்குப் பெட்டியில்தான் பேசுவார்கள். அதனை ஏப்ரல் 23 ஆம் தேதி பேசப் போகிறார்கள்.
செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார், அவ்வாறுதான் இருப்பார், 23 ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் வலிமையாக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆள்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோதே வானதி சீனிவாசனின் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை வடக்கு தொகுதியிலும் ரூ. 5000 ரூபாய் கொடுத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அது இந்தத் தேர்தலை பாதிக்காது” என்றார்.
Summary
Former State BJP President Annamalai conducted election campaigning on a two-wheeler alongside Vanathi Srinivasan, the BJP candidate for the Coimbatore North constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்! வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


