சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் தருவது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதால் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Complaint Alleging AIADMK Members Distributed Rs 10,000 Tokens: Madras HC Closes the Case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு

நிரவி - திருப்பட்டினம்: நேரடி போட்டியில் திமுக - பாஜக
மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி. மூா்த்திக்கு மீண்டும் வாய்ப்பு!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள் வெளியீடு! முதல்வர் ஸ்டாலினுடன் யார் போட்டி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


