கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டதாக, நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்கும் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளர்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பான கடிதத்தை பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான கடித்தை வெளியிட்டு, விளக்கம் அளித்திருந்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்திற்கு, பதில் தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”மத்திய நிதியமைச்சரே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.
அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது.
கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன், இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister Stalin's remarks on the paddy incentive issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




